வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (10:15 IST)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – கமல் ஆவேச ட்வீட்!

சென்னை சௌகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தடயங்களை சேகரித்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்.” என கூறியுள்ளார்.