திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:15 IST)

இவ்வளவு ஊழல்! முதல்வர் ராஜினாமா செய்வாரா? - களத்தில் இறங்கிய கமல்ஹாசன்

தமிழகத்தில் இவ்வளவு ஊழல் நடந்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜினாமாவை யாரும் கோராதது ஏன் என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். முக்கியமாக ஊழல் பற்றி அவர் அதிகமாக பேசி வருகிறார். சமீபத்தில் கூட நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்நிலையில்,  ஒரு மாநிலத்தில் போதுமான ஊழல் மற்றும் துயர சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு பொறுப்பேற்று ஒரு முதல்வர் அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என ஏன் எந்த கட்சியும் வலியுறுத்தவில்லை? என அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
அடுத்த டிவிட்டில் “என் எண்ணம் என்பது நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான். அதிமுகவோ அல்லது திமுகவோ.. யார் என்னுடைய குரலை மேம்படுத்த யாருக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. தற்போதுள்ள  கட்சிகள் சரியில்லை எனில், வேறு ஒன்றை தேட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுவரை அரசு பற்றி பொதுவாக கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி நேரிடையாக கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவரின் இந்த கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.