செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (15:07 IST)

கூட்டணியா ? இல்லையா ? – தெளிவாகக் குழப்பும் கமல் …

வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் குழப்பமான பதிலை அளித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒருப் பகுதியாக கடந்த இரண்டு நாட்களாக பொள்ளாச்சியில் நடந்து வரும் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணிக் குறித்த மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்று தெரிந்துகொள்ள மக்களும் அக்கட்சியின் தொண்டர்களும் ஆவலாக உள்ளனர்.

கூட்டணிக்காக , முதலில் காங்கிரஸ் பக்கம் சாய்வது போல மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸ், ம.நீ.ம.-ஐ கைவிரித்துவிட்டு திமுக கூட்டணியில் தஞ்சம் புகுந்துள்ளது. இதனால் கமலுக்கு இருந்தக் கூட்டணிக் கதவு அடைக்கப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணிக் அமைத்துப் போட்டியா என்ற குழப்பத்தில் இருந்தது மக்கள் நீதி மய்யம்.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது குழப்பமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் கமல். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில் ’ மக்கள் நீதி மய்யம், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. ஆனாலும் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். கூட்டணியால் எங்கள் கட்சிக்கு வலிமை சேருமானால் கூட்டணி அமைப்போம். ஆனால், நாங்கள் யாரையும் சுமையாக் தூக்கி சுமக்க மாட்டோம். எங்கள் கொளகையில் உறுதியாக உள்ளோம். திமுக மற்றும் அதிமுக வோடு கூட்டணி அமைக்கமாட்டோம். இரண்டுக் கட்சிகளுமே ஊழல் கறைப்படிந்தவையே. நாங்கள் வெற்றியைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களிடம் செயல்திட்டம் தெளிவாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நீதிமய்யம் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பம் இன்னும் நீடித்டு வருகிறது.