கங்கையில் மிதந்த 150 சடலங்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?

கங்கையில் மிதந்த 150 சடலங்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?
siva| Last Updated: செவ்வாய், 11 மே 2021 (07:22 IST)
கங்கையில் மிதந்த 150 சடலங்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தினமும் மூவாயிரத்து தாண்டி வருகிறது. இந்த நிலையில் கங்கை நதியில் சுமார் 150 சடலங்கள் மிதந்து கொண்டு வந்ததை அடுத்து அந்த சடலங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களா?என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் என்ற மாவட்டத்தில் ஓடும் கங்கை நதியில் திடீரென 150க்கும் மேற்பட்ட சடலங்கள் திடீரென மிதந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சடலங்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்றும், கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் கங்கை நதியில் பிணங்களை வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் பீகார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பீகாரில் உள்ள கங்கை நதியில் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வருவதை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் கங்கை நதியை பார்த்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :