பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் என்பதே லட்சியம் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் இன்று முதல் நான்காவது கட்ட பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இன்று சேலம் மற்றும் வேலூர் பகுதியில் அவர் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை மற்றும் சம ஊதியம் அளிப்பதே தனது லட்சியம் என்று சேலத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும் என்றும் அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்
விவசாயம் அதன் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை சம ஊதியம் என்பதை எங்கள் லட்சியம் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பெண்களுக்கு சம உரிமை, சம ஊதியம் என்பது பெண்களை ஒட்டுமொத்தமக கவரும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது