செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:43 IST)

விக்ரம் படத்தில் பிரபுதேவா கதாபாத்திரம் என்ன? கசிந்த பின்னணி!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில்   உருவாகும் புதிய படத்துக்கு விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு இதே பெயரில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கமல் ஒரு போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பிரபுதேவா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.