1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (07:14 IST)

ரசிகர்களுக்கு கமல் புதிய உத்தரவு: அமைச்சர்கள் அதிர்ச்சி

ஊழல் புகார்களை அந்தந்த துறை அமைச்சர்களுக்கும் செயலர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு சமீபத்தில் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை அடுத்து அமைச்சர்களின் இமெயில்களுக்கு புகார்கள் பறந்தன. இதனையடுத்து அமைச்சர்களின் இணையதளங்களில் திடீரென இமெயில் முகவரிகளும் தொலைபேசி எண்களும் காணாமல் போயின



 
 
இந்த நிலையில் அமைச்சர்களின் இணையதள முகவரிகள் மூடப்பட்டதால் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் அமைச்சர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் கமல்ஹாசன் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் முகவரி, தொலைபேசி எண், பேக்ஸ் எண் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பி வைத்த முகவரி இதுதான்
 
லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தின் முகவரி: எண்.293, எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016
 
தொலைபேசி எண்கள்: 22321090, 22321085, 22310989, 22342142 
 
பேக்ஸ் எண்: 22321005 என்ற பேக்ஸ் எண்
 
இமெயில் முகவரி: [email protected]