செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 24 ஜூலை 2025 (10:02 IST)

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நாளை  மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "நீங்கள் என்னை வாழ்த்தி அனுப்ப வந்திருப்பதாக நான் நினைத்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி," என்று தெரிவித்தார். மேலும், தான் உறுதிமொழி எடுக்கவும், தனது பெயரை பதிவு செய்யவும் செல்வதாகவும் கூறினார்.
 
ஒரு இந்தியனாக தனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பையும், கடமையையும் தான் பெருமையுடன் செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.
 
தனது கன்னிப் பேச்சு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, "அதை இப்போது சொல்லக் கூடாது. அங்கேதான் பேச வேண்டும்," என்று கமல்ஹாசன் பதிலளித்தார். அவரது மாநிலங்களவை பதவியேற்பு மற்றும் முதல் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva