செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (13:18 IST)

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கவினின் முன்னாள் காதலி - அதிர்ச்சியில் லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை  மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்து நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகிறது விஜய் டிவி. 


 
அந்தவகையில் ஏற்கனவே மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு போட்டியாளர்களுடன் சண்டையிடுவதை  பேசும் பொருளாக வைத்து தொலைக்காட்சியின் டிஆர்பியை அதிகரித்து வருகின்றனர். 
 
இதில் ஒரு படி மேலே சென்று தற்போது  சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளிட்ட முன்னாள் போட்டியார்கள் மூவரையும்  வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர். இதில் சாக்ஷி, அபிராமி கவினின் முன்னாள் காதலிகள் என்பதால் நிச்சயம் இந்த வாரம் நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யம் உச்சத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸில் நுழைந்த உடனேயே மோகன் வைத்யா மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இலவசமாக கண்டென்ட்களை வாரி வழங்கி வருகிறார். மேலும் சாக்ஷி ஷெரினிடன் சென்று "நீ தான் ஜெயிக்கவேண்டும்" என்று கூறி அவருக்கு சப்போர்ட் செய்கிறார். 
 
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் "இப்போ பாருங்க கவின் மூஞ்சிய...முகத்தில் ஈ ஆடல" லொஸ்லியாவுக்கும் கவினுக்கும் பேய் ஓட்ட போறா சாக்ஷி என்றெல்லாம் கூறி கிண்டலடித்து வருகின்றனர்.