1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (07:43 IST)

சர்கார் படத்தை குறிப்பிட்டு விஜய்யை தாக்கிய அரசியல் தலைவர்!

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும்  படத்துக்கு  சர்கார் என பெயர் பெயர் வைக்கப்பட்டதில் இருந்தே அரசியல் தலைவர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் வந்து  கொண்டிருக்கின்றன.
 
சர்கார் இசை வெளியீட்டு விழா மேடையில் விஜய் மிக கோபமாக இன்றைய அரசியல் மற்றும் ஊழல் குறித்து பேசினார். இந்த பேச்சை பல அரசியல் தலைவர்கள் ரசிக்கவில்லை மாறாக கடும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.. 
 
தற்போது பாஜகவை சேர்ந்த தமிழசை சௌந்தர்ராஜன் அளித்துள்ள பேட்டியில் சர்கார் படத்தை நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.
 
"சர்கார் என படத்தலைப்பு வைத்துள்ளவர்களுக்கே மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு ஆர்வம் என்றால், சர்காராக இருக்கும் எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்" என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்