1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 ஜனவரி 2022 (13:32 IST)

ஒற்றை மனிதராக சாதித்த ஜின்னாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னையில் பெய்த திடீர் மழையின்போது ஒற்றை ஆளாய் சாதித்த ஜின்னா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென சென்னையில் கனமழை கொட்டியது என்பதும் அதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தபோது உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஜின்னா என்பவர் மிகச் சிறப்பாக ஒற்றை ஆளாக செயல்பட்டதை அடுத்து அவருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
விபரீத அளவில் மழையும் பொழிந்து சென்னைச் சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்து நின்ற நாள். உயிர் காக்கும் ஆம்புலன்ஸுக்கு ஒற்றை மனிதராக வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ஜின்னா. இக்கட்டான சமயத்தில்,திடமிருப்போர் எப்படிச் செயல்படவேண்டும் என்று வழிகாட்டியிருக்கும் அவருக்கு வாழ்த்துகள்