செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:10 IST)

பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் விசேஷங்களில் முக்கியமானது கள்ளழகர் வைகை ஆற்றில் எழு8ந்தருளும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை காண மதுரையை சுற்றியுள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வைகை ஆற்றில் கூடுவது வழக்கம்.
 
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இன்று காலை 6 மணிக்கு இறங்கினார். பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகரை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். அழகர் வைகையில் இறங்கியவுடன் புனித நீர் பீய்ச்சி அடிக்கபப்ட்டது.
 
பின்னர் கள்ளழகர் தற்போது வைகையாற்றில் உள்ள ராமராயர் மண்டபத்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த மண்டபத்தில் அழகரை ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.