ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (13:33 IST)

அது சாராயமே இல்லை.. மெத்தனாலில் கலந்த தண்ணீர்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

விஷச்சாராய விற்பனை விவகாரத்தில் மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த தகவல் கைதான மாதேஷிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
ஆன்லைன் முலம் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் தின்னர் என்ற பெயரில் மெத்தனாலை மாதேஷ் வாங்கியதாக தெரிகிறது. சென்னை மாதவரம் ரவுண்டானா அருகேயுள்ள தொழிற்சாலையில் இருந்தும் மெத்தனால் வாங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
மாதேஷிடம் மெத்தனாலை வாங்கிய சின்னதுரை, அதில் 1 லிட்டர் தண்ணீரை கலந்து சாராயம் என்று அதனை விற்றுள்ளார். சின்னதுரையிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதில் மேலும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து கோவிந்தராஜன் என்பவரும் சாராயம என விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கள்ளக்குறிச்சியில் 55 உயிர்களை காவு வாங்கிய மெத்தனால் எங்கிருந்து வந்தது ? என போலீசார் தீவிர விசாரணை செய்ததில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மெத்தனாலை விற்றவர்கள் யார்? எங்கிருந்து தடையில்லாமல் மெத்தனால் கிடைத்தது? என்ற கோணத்தில், ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
 
Edited by Mahendran