செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (15:34 IST)

அது வெறும் பேனா மட்டுமில்ல..! புயல், நிலநடுக்கத்தை அறியும் தொழில்நுட்பம்! – பொதுப்பணித்துறை!

Kalaingar Pen Statue
சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள கலைஞரின் பேனா நவீன தொழில்நுட்பங்களோடு அமைய உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக அவரது பேனாவை மெரினா கடற்கரை அருகே கடல்பகுதியில் சிலையாக அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் மீனவ சங்கங்கள் சில பேனா சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தனர்.

இதனால் பேனா சிலை அமைக்கும் விவகாரத்தில் சர்ச்சை நிலவி வரும் நிலையில் சிலை அமைப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் சுற்றுசூழலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அந்த சிலையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவிக்கும் கருவிகளும் அமைய உள்ளதாகவும், மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்திரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக கொண்டு இந்த பேனா சிலை அமைய உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K