1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (13:21 IST)

‘கக்கூஸ்’ ஆவண பட இயக்குனர் திவ்யபாரதி திடீர் கைது

சமூக ஆர்வலரும், ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
2009ம் ஆண்டு திவ்யபாரதி மாணவராக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தற்போது அவரை கைது செய்துள்ளது தமிழக போலீஸ். 
 
இவர் ‘கக்கூஸ்’ என்ற ஆவண படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளை பதிவு செய்தது. எனவே, இப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. சமூக செயல்களுக்காக சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருதையும் திவ்யபாரதி பெற்றுள்ளார். 
 
இந்நிலையில்தான் அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் ஆகஸ்டு 8ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்த வளர்மதி என்ற கல்லூரி மாணவி மீது, சமீபத்தில் தமிழக அரசு குண்டாஸ் சட்டம் போட்டு அவரை கைது செய்துள்ள நிலையில், திவ்யபாரதியின் கைது பலரை கொந்தளிக்க செய்துள்ளது.