வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (12:35 IST)

ராமதாஸைப் போய் வெட்டுங்கள் – குருவின் தங்கையின் பேச்சால் பரபரப்பு !

காடுவெட்டியில் உள்ள வன்னியர் சங்கத் தலைவரின் சமாதிக்கு அருகில் அவரது தங்கை வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நுரையீரல் திசுப்பை நோய்க் காரணாமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். குரு மறைந்த அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அவரது குடும்பத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்நிலையில் குருவின் மகளின் ரகசியத் திருமணம் மற்றும் குருவின் மகன் கனலரசனின் பரபரப்பானப் பேட்டி ஆகியவற்றால் பாமகவுக்கும் குரு குடும்பத்திற்கும் சுமூகமான உறவு இல்லை என பாமக தொண்டர்களுக்குத் தெரிய வந்தது. மேலும் குரு குடும்பத்தினர் பாமக வை விட்டு விலகி புதிய வன்னியர் சங்கத்தை உருவாக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி காடுவெட்டிக் குருவின் 58 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த குருவின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அறிவித்தார். பாமக கட்சி நிர்வாகிகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. பிப்ரவரி 1 காலை 9 மணி முதல் 10 மணி வரை அவரது குடும்பத்தினர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டுப் பேசிய குருவின் மகன் கனலரசன் ’எங்கள் குடும்பத்தாரை அஞ்சலி செலுத்த விடாமல் சிலர் மறைமுகமாகத் தடுக்கின்றனர்.  அதனால் என் மாமவை அஞ்சலி செலுத்த விடாமல் போலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.’ என பாமக வின் மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து குருவின் பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று குருவின் தங்கை ராமாதாஸைப் போய் வெட்டுங்கள் என வன்னிய இளைஞர்களைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார். அதில் ‘ வன்னிய ரத்தத்தை ராமதாஸ் அசுத்தப்படுகிறான். நீங்கள் எல்லாம் உண்மையான வன்னிய ரத்தமாக இருந்தால் அந்த ராமதாஸைப் போய் வெட்டுங்கள்’ என வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியுள்ளார்.
அவர் பேசியுள்ள வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் காடுவெட்டிப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. அங்கு அதிகளவில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.