காளீஸ்வரி நிறுவனம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை அதிர்ச்சி
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரபல காளீஸ்வரி எண்ணெய் நிறுவனம் ரூ.90 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரபல காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில், 250ற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 17ம் தேதி காலை ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர்.
இந்த நிறுவனம், பல வருடங்களாக முறையான வருமானவரியை தாக்கல் செய்யவில்லை எனவும், அதன் புகாரிலேயே இந்த சோதனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் கடந்த 20ந் தேதி வரை, அதாவது தொடர்ந்து 4 நாட்கள் சோதனை நடத்தினர்.
முடிவில், இந்த நிறுவனம் ரு.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை ஒப்புக்கொண்ட அந்த நிறுவனம், அந்த வரியை செலுத்தவதற்கு முன்வந்துள்ளதாக தெரிகிறது.
கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல பிராண்டுகளை இந்த நிறுவனம் தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.