வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2024 (11:00 IST)

+2 முடிச்சிருந்தா போதும்..! தமிழ்நாடு காவல்துறையில் இளநிலை நிருபர் பணியிடங்கள்..! – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு காவல்துறையில் இளநிலை நிருபர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொது நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகளை காவல் தலைமைக்கு ரிப்போர்ட் செய்வதற்கான இளநிலை நிருபருக்கான 54 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிகளில் சேர விரும்புவோர் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்கள் தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியில் சேர்வதற்கு வயது வரம்பு எஸ்.சி\எஸ்.டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையிலும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 32 வயது வரையிலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் இளநிலை நிருபர்களுக்கு ரூ.36,200 – ரூ.1,14,800 வரையிலான கிரேடு பே சம்பளம் வழங்கப்படும்.
மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை தரவிறக்க : https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf

Edit by Prasanth.K