1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2017 (15:25 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி வெளியேற்றம்? - வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஜூலி  விரைவில் வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது.


 

 
அதாவது, இந்த நிகழ்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர். செல்போன், தொலைக்காட்சி, செய்திதாள், இணையம் என வெளியுலக தொடர்பின்றி 100 நாட்கள் அவர்கள் ஒரே விட்டிற்குள் தங்கியிருக்க வேண்டும். அவர்களே சமைத்து சாப்பிட வேண்டும். இதில் யாருடன் பிரச்சனை செய்யாமல் 100 நாட்கள் தாக்குபிடிப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதேபோல், ஒவ்வொரு நாளும் நடந்த முக்கிய நிகழ்வுகளை தினமும் இரவு 9 மணியிலிருந்து 10 மணி வரை ஒளிபரப்புகிறார்கள். 
 
இந்நிலையில், போட்டியிலிருந்து வெளியேற்றப்படும் முதல் நபர் என்பதை பற்றி எல்லோரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் டிவி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளது. அதில் பலரும் ஜூலியின் பெயரையே கூறியுள்ளனர். சிலர், நடிகர் ஸ்ரீ மற்றும் அனுயா ஆகியோரையும் கூறியுள்ளனர்.


 

 
ஜூலி என்பவர் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். மேலும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் “சின்னம்மா..சின்னம்மா..ஓ.பி.எஸ் எங்கம்மா” என ஸ்டைலாக முழக்கமிட்டு பிரபலமானவர் அவர்.  படுக்கையை தேர்வு செய்வதில் இவருக்கும், நடிகை ஆர்த்திக்கும் முதல் நாளே மோதல் ஏற்பட்டது.  எனவே, சும்மா டைம் பாஸ் செய்வதற்காக ஜூலி வந்துள்ளர் என ஆர்த்தி பகீரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும், நடிகர் ஸ்ரீ-யிடம் இவர் நெருக்கமாக பேசும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனால் அவர் எலிமினேட் ஆகப்போவதில்லை. ஏனெனில், இப்படி செய்தி வெளியானது அவர்கள் யாருக்குமே தெரியாது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதல் நபராக யார் வெளியேற்றப்பட இருக்கிறார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.