1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 12 ஜூலை 2017 (16:24 IST)

ஆரவ் மீது காதல் கொண்ட ஜூலி? - வீடியோ பார்க்கவும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகர் ஆரவ் மீது, ஜூலை காதல் வயப்பட்டுள்ளது போல் பேசும் ஒரு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தினமும் இரவு  ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் பரபரப்பான சம்பவங்கள் இடம் பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ‘இதோ வந்துடுச்சி புது ட்விஸ்டு’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது முகநூலில் வெளியிட்டுள்ளது.
அதில், தனக்கு ஆரவ் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை பிடித்திருப்பதாகவும் ஜூலி நடிகை காயத்ரி ரகுராமிடம் கூறுகிறார். இதை  நமீதா மற்றும் சினேகன் ஆகியோரிடம் சொல்லி கிண்டலடித்து சிரிக்கிறார் காயத்ரி. இதன் தொடர்ச்சி இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் எனத் தெரிகிறது.


 
 
ஏற்கனவே, நடிகை ஓவியா, ஆராவை புரபோஸ் செய்து சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளான நிலையில்,  தற்போது அதே தவறை ஜூலியும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜூலியை சமூக வலைத்தளங்களில் வைத்து செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.