வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 ஏப்ரல் 2021 (07:07 IST)

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் 
 
கோவையில் வாக்குப்பதிவை பார்வையிட வந்த கமல்ஹாசனிடம் செய்தி சேகரிக்க நிருபர்கள் திரண்டனர். அப்போது நிருபர் ஒருவரை தனது கைத்தடியால் கமலஹாசன் தள்ளி விட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ புகைப்படங்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசனின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க வந்த தொலைக்காட்சி செய்தியாளர் மோகன் என்பவரை தனது கைத்தடியால் தடுத்து நிறுத்தியதற்கு கோவை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. பத்திரிகையாளர்களிடம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்