1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (08:26 IST)

திமுக கூட்டணியில் கண்டிப்பாக சேர மாட்டோம்: ஜான் பாண்டியன் பேட்டி..!

john pandian
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் நெல்லையில் பேட்டி அளித்த போது திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என்று கூறினார்.
 
 தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இல்லாத நிலையில் எந்த கூட்டணியில் சேர்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிகிறது. 
 
தற்போது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்று கூறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் திமுக கூட்டணியில் மட்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். 
 
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும்  எந்த கூட்டணியில் இணைவது என்பது குறித்து விரைவில் ஆலோசனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் 
 
 தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva