20 நாட்களுக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் அஜித் – தல 59 அப்டேட்

Last Modified சனி, 16 பிப்ரவரி 2019 (13:26 IST)
அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் பிங்க் ரீமேக் இந்தி படத்திற்காக அஜித்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வாசம் படத்தின் விஸ்வரூப வெற்றியை அடுத்து அஜித் தனது அடுத்தப்படமாக ஹெச் வினோத் இயக்கும் இந்தி பிங்க் படத்தின் ரீமேக்கில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் அஜித் 59 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற  படத்தின் பூஜையன்றே படம் அஜித் பிறந்தநாளான மே 1- ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகப் படக்குழு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன், அபிராமி வெங்கடாசலம், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத மற்ற முன்று கதாநாயகிகள் இடம்பெறும் 25 சதவீதக் காட்சிகளை இயக்குனர் படமாக்கியுள்ளார். இதையடுத்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு அடுத்த ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடீயோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு நடக்க இருக்கிறது. அதற்காக அஜித் ஹைதராபாத் செல்ல இருக்கிறார்.

மொத்தம் அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அஜித் தனது மொத்தக் காட்சிகளையும் நடித்துக்கொடுக்க இருக்கிறார். 20 நாட்கள் மட்டுமேப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் இந்தப் படத்திற்கு அஜித்திற்கு 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியே அஜித்தின் இந்த சம்பள உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :