செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (15:17 IST)

ஊரைவிட்டு ஓடியவர் டிடிவி – ஜெயக்குமார் விளாசல் !

எம்.ஜி.ஆர். ஆட்சியை ஜெயலலிதா கலைத்ததாகக் கூறிய டிடிவி தினகரன் கூறியதை அடுத்து அவரைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜெயலலிதா கலைத்ததாக சமீபத்தைய தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியிருந்தார். இதற்கு அதிமுகவினர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ’அவரின் பேச்சை அதிமுகவின் உண்மையானத் தொண்டர்கள் யாரும் நம்பமாட்டார்கள். ஜெயலலிதாவையேக் குற்றம் சொல்லும் துரோகத்தை அவர் செய்துள்ளார். அவருக்கு எம்.பி. பதவி அளித்தது தான் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறி என நினைத்து அவரை வீட்டுப்பக்கமே வரக்கூடாது என ஆணையிட்டவர் ஜெயலலிதா. அதனால் 10 ஆண்டுகள் ஊரைவிட்டே ஓடியவர் அவர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஜெயலலிதாவையேக் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார் அவர்’ எனக் கூறியுள்ளார்.