1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (18:18 IST)

’ஜெயலலிதா விரைவில் பொறுப்புகளை ஏற்பார்’ - பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பொறுப்புகளை ஏற்பார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அறிவுரையின் பேரில் நியமிப்பதாக தமிழக ஆளுநர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார்.
 
இந்நிலையில், அப்பல்லோவில் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்த அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ”விரைவில் பொறுப்புகளை ஏற்பார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அனைத்துக் கட்சி கூட்டம் பேரவையில் தீர்மானம் என்பது தற்போது தேவையில்லை” என்றார்.