வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (11:25 IST)

ஜெயலலிதா வாயை திறந்தால் பச்சைபொய்: சொல்வது யார் தெரியுமா?

ஜெயலலிதா வாயை திறந்தால் பச்சைபொய்: சொல்வது யார் தெரியுமா?
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாயிலிருந்து வருவதெல்லாம் பச்சைபொய் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.


 
 
இந்த தேர்தலில் குஷ்பு போட்டியிடவில்லை என்றாலும் அவருக்கு மவுசு அதிகமாகவே உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் என அவ்வப்போது வதந்திகள் வந்து அவை புஷ்வானமாக போவிட்டது.
 
தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடம் எல்லாம் ஜெயலலிதாவை குஷ்பு விமர்சிக்க தவறுவதில்லை. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவை விமர்சித்து வரும் குஷ்பு தற்போது கவிதையை போல பச்சை, பச்சை, பச்சை என தொகுத்து விமர்சித்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் சின்னம் இரட்டை இலை. அதன் நிறம் பச்சை. அவர் உடுத்தும் உடை பச்சை. அவர் வாயிலிருந்து வரும் வார்தைகளும் பச்சைபொய் என குஷ்பு ஜெயலலிதாவை பற்றி பேசியிருக்கிறார்.
 
மேலும், தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லையென்று மற்றொரு பொய் சொல்கிறார் ஜெயலலிதா. இன்றும் தமிழகத்தின் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் ஏன் சென்னையிலும் கூட இரண்டு மணி நேரம் மின் தடை உள்ளதுதானே என்றார் குஷ்பு.