1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (16:51 IST)

கீழணை & வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க, ஜெயலலிதா உத்தரவு

சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
 
கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்குச் சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து  தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 
 
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 
 
இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.