1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 8 மே 2016 (17:13 IST)

சீன பொருட்களை கொடுத்து ஜெயலலிதா ஏமாற்ற பார்க்கிறார் - குஷ்பூ

சீன செல்போனை கொடுத்து மக்களை ஜெயலலிதா ஏமாற்ற பார்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, ”ஜெயலலிதா அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதா தூங்கி விட்டு இப்போது தான் விழித்து கொண்டது போல தெரிகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர் நினைத்திருந்தால் முதல்வராக பொறுப்பேற்றவுடனே செய்திருக்கலாம்.
 
ஆனால் அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் சமயத்தில் இலவசங்கள் என்ற வாக்குறுதியை கொடுத்து அனைவரையும் கவர்ந்து விடலாம் என நினைக்கிறார்.
 
அனைவருக்கும் செல்போன் வழங்குவதாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. ரூ.350 மதிப்புள்ள ஒரு சீன செல்போனை ஜெயலலிதா கொடுத்து ஏமாற்ற பார்க்கிறார். இவ்வாறு கூறினார்.