1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 15 அக்டோபர் 2016 (11:22 IST)

தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ?. : அப்பல்லோ அப்டேட்ஸ்

தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்ட ஜெ. : அப்பல்லோ அப்டேட்ஸ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

 
எய்ம்ஸ் மருத்துவர்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே சென்னை வந்துள்ளார். தற்போது அவரின் ஆலோசனைப்படிதான் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.
 
இந்நிலையில், இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர், நேற்று தரைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு 3 மணி நேர சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதாகவும் தகவல் உலா வருகிறது.
 
மேலும், தரைத் தளத்திற்கு அவரை கொண்டு சென்ற போது, அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளின் அறைகள் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.