சசிகலா இல்லாம அதிமுக நல்லா இருக்கு... ஜெயகுமார் பேச்சு!
சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் தற்போது உட்கார்ந்து இருக்கிறது. இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் அவர் சசிகலாவின் சமீபத்திய ஆடியோ குறித்து, சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலை இனி தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.