1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jayakumar says about tamil nadu

தமிழ்நாடு என்பதை ஆதரிக்கிறோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் இந்தியா என்ற நாடு இருக்கும் நிலையில் அதற்கு கீழே ஒரு நாடு தமிழ்நாடா என்றும் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி என்று கூறினார்
 
அவரது இந்த கருத்துக்கு திமுகவில் உள்ள பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணா வழியில் வந்தவர்கள் நாங்கள் என்றும் அதனால் அண்ணா வாங்கி கொடுத்த தமிழ்நாடு என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
1963ஆம் ஆண்டு மெட்ராஸ் என்று இருந்த மாநிலத்தை தமிழ் நாடு என்று மாற்ற வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா போராடினார் என்றும் அப்போதைய மத்திய அமைச்சர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் கூட அண்ணா போராடி தமிழ்நாடு என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அந்த பெயரை அண்ணா வழியில் நாங்கள் பின்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!