செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (06:57 IST)

கமல், ஸ்டாலின், ஓபிஎஸ் கூட்டணியா? ஜெயகுமார் கேள்வி

நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அரசியல் குறித்த அறிக்கை பொதுமக்களிடமும், அவரது ரசிகர்களிடமும் பெரிய அளவில் போய் சேர்ந்ததால் இந்த ஒரு அறிக்கை பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொடுத்த லிங்கிற்கு ஊழல் புகார்கள் ஆயிரக்கணக்கில் பறந்து வருவதாக கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் அறிக்கைக்கு நிதியமைச்சர் ஜெயகுமார் தற்போது பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறும் கமல், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த பிரச்சனைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா? 
 
கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயார்.  ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு கமல் நிரூபித்தால் நடவடிக்கை எடுப்போம். ஸ்டாலின், பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்' என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.