1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (12:32 IST)

ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைகோக்கள் - ஜெயக்குமார் பேட்டி

பாஜக தேசிய செயலாளர் மற்றும் எஸ்.வி.சேகர் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆளுநர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், பெண் செய்தியார் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரமாகியது. அந்த செய்தியாளர் அதை தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட, ஆளுநர் இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது.
 
அந்த நிலையில், ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யை கொச்சைப் படுத்தும் வகையில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டிருந்தார். இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டது.
 
அதேபோல், பெண் செய்தியாளர்களை இழிவு படுத்தும் வகையில் ஒருவர் இட்ட பதிவை எஸ்.வி.சேகர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரமும் சர்ச்சையை கிளப்ப அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
 
இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய ஜெயக்குமார் “விளம்பரம் தேடும் எச்.ராஜா, எஸ்வி சேகர் இருவரும் சைபர் சைக்கோக்கள் ” என தெரிவித்தார். மேலும், புகார் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.