1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (15:45 IST)

முதல்வரை சந்திக்கும் மோடி எங்களை சந்திக்க மறுப்பது ஏன்? ஸ்டாலின் கேள்விக்கு ஜெயக்குமார் பதில்

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை தனியாக சந்திக்கும் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தினை சந்திக்க மறுப்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம் என்று ஸ்டாலின் கூறியதற்கு ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

 
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அழைத்து விடுத்தார். அதன்படி இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
 
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:-
 
அனைத்து கட்சி கூட்டத்தினை சந்திக்க பிரதமர் மறுப்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானம். முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை தனியாக சந்திக்கிறார் மோடி என்று கூறினார்.
 
ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். ஜெயக்குமார் கூறியதாவது:-
 
முதலமைச்சர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்திக்க மத்திய அரசு கூறியது. 
 
நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு சந்திப்பதாக பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை என்று கூறியுள்ளார்.