1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 மார்ச் 2018 (14:15 IST)

எல்லோரும் கூண்டோடு ராஜினாமா: முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்தது.


 
இருப்பினும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்த பிரச்சனையில் அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என ஆலோசணை கேட்க ஸ்டாலினை தொலைபேசி மூலம் அழைத்தார் முதல்வர். அதன்படி முதல்வரை கோட்டையில் சந்தித்தார் ஸ்டாலின். பேச்சு வார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர் கூறுகையில்,

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் மோடியை அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்த முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் முன்வராதது வேதனை அளிக்கிறது. எனவே, மார்ச் 8-ம் தேதி சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினோம்.

மேலும் தமிழக தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் கூறினேன் என்று கூறினார்.