1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (22:53 IST)

ஜனவரி மாத ஊதியம் நிறுத்திவைப்பு அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் கடைசி நாளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடப்படும். அந்த வகையில் நாளை மறுநாள் ஜனவரி 31ஆம் தேதி அனைவருக்கும் சம்பளம் போடப்படவுள்ள நிலையில் ஜனவரி மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய ஒருவார போராட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டாலும் இன்னும் ஒருசில அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஜனவரி மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு கருவூல உதவி அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் இம்மாதம் ஜனவரி 31ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
 
மேலும் போராட்டம் செய்த நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது