கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்காம் நாளாகவும் தொடரும் ஜேக்டோ – ஜியோ போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 22 ம் தேதி ஜேக்டோ- ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்பாட்டம் நடைபறெ்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.