தமிழனுக்கு குரல் கொடுத்த இசை தமிழச்சி: மாணவண்டா பாடல் சும்மா பட்டைய கிளப்புது! (வீடியோ இணைப்பு)
தமிழனுக்கு குரல் கொடுத்த இசை தமிழச்சி: மாணவண்டா பாடல் சும்மா பட்டைய கிளப்புது! (வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்த அறப்போராட்டம் வெற்றியடைந்ததை அடுத்து பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி மாணவர்களும், இளைஞர்களும் வீதிக்கு வந்து போராடினார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த பாடலை எழுதி, இசையமைத்துள்ளார் அனுராதா ஸ்ரீராம். ராஜ் பரத், கோகுல கிருஷ்ணன், கிரண், சக்தி ராஜேஷ்வர் ஆகியோர் கூட்டணியில் அனுராதா ஸ்ரீராமே எழுதிய ‘மாணவன்டா’ பாடலை அனுராதா ஸ்ரீராமே பாடியுள்ளார்.
நன்றி: Tamil Funny Videos
ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறிய பாடல் ஒன்றை பாடிய அனுராதா ஸ்ரீராமுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனையடுத்து இந்த புதிய மாணவண்டா பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.