வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (06:59 IST)

அந்த ஜோடி செருப்பு சேராது: ஜல்லிக்கட்டு நாயகன் மோடி குறித்த கேள்விக்கு கமல் பதில்!

பிரதமர் மோடி நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பாக தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே 
 
நேற்று தாராபுரத்தில் பிரதமர் முன்னிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியபோது ’உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான்’ என்றும் அவர்தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அனுமதி அளித்தார் என்றும் கூறினார் 
 
இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ’அந்த ஜோடி செருப்பு அவர்களுக்கு சேராது’ என்று பதிலளித்தார்
 
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சாரம் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் நாங்கள் கடிகார முள்ளை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நாயகன் மோடி குறித்த கேள்விக்கு ’அந்த செருப்பு சேராது’ என கமல்ஹாசன் பதில் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது