திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:31 IST)

ஜல்லிக்கட்டு சசிகலாவுக்கு கிடைத்த வெற்றி; அவர் எடுத்த துரித நடவடிக்கையே காரணம்: தம்பிதுரை புகழ்ச்சி!

ஜல்லிக்கட்டு சசிகலாவுக்கு கிடைத்த வெற்றி; அவர் எடுத்த துரித நடவடிக்கையே காரணம்: தம்பிதுரை புகழ்ச்சி!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பின்னர் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மேற்கொண்ட துரித நடவடிக்கை தான் காரணம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


 
 
மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு தீ பற்றி எரிந்தது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் வீதிக்கு வந்து போராடியது. 7 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் ஜல்லிக்கட்டுக்கு வழி பிறந்தது.
 
மாணவர்கள் போராட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்னையில் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தார் போன்ற செய்திகளும் பாடங்களும் வெளியானது. இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் மத்தியில் பேசப்பட்டது.
 
பெயருக்கு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டார் நாடாளுமன்றத்தில் 50 எம்.பிக்களை வைத்துள்ள கட்சியின் தலைமையாக இருக்கும் சசிகலா.
 
இதனையடுத்து மாணவர்களின் பெரும் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்துள்ளது மத்திய மாநில அரசு. ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டுவந்தது சசிகலாவுக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார். அதிமுக எம்.பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை.
 
இது தொடர்பாக பேசிய அவர், ஜல்லிக்கட்டு நடத்த துரித நடவடிக்கை மேற்கொண்ட சசிகலாவிற்கும், அதிமுக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் கிடைத்த வெற்றி இது என குறிப்பிட்டுள்ளார்.