சென்னை அழைத்து வரப்பட்டார் ஜாபர் சாதிக்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை
போதை பொருள் தடுப்பு பிரிவுஅதிகாரிகளால் சமீபத்தில் டெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் டெல்லியில் மூன்று தமிழர்கள் போதைப் பொருளுடன் கைதான நிலையில் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என தெரிய வந்தது.
இதனை அடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை காவலில் எடுத்து போதை பிரிவு தடுப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்டதாகவும் சென்னையில் உள்ள அயப்பாக்கம் என்ற பகுதியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
அவரிடம் தீவிர விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran