வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜனவரி 2020 (15:47 IST)

பாமவில் இருந்து விலகும் ஜெ குருவின் மகன் – தனிக்கட்சி ஆரம்பிக்க திட்டமா ?

பாமகவில் இருக்கும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் அந்த கட்சியில் இருந்து விலகி தனியாகக் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாமகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர். தொடர்ந்து அவரின் மகன் மற்றும் மனைவி ஆகியோர் பாமக தலைமையைத் தாக்கிப் பேசினர்.

குருவின் மணிமண்டப திறப்பு விழாவுக்கு கனலரசனை சமாதானப்படுத்தி வரவைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதையடுத்து இரு தரப்பும் சமாதானம் ஆகிவிட்டதாக நினைத்த வேளையில் இப்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. விரைவில் கல்லூரிப் படிப்பை முடிக்க இருக்கும் கனலரசன், தனியாக கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பொறுப்புகளை அவரது அக்காவான விருதாம்பிகை  நிர்வகிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் குருவின் ஆதாரவாளர்களைக் கொண்டு விரைவில் கட்சி ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது.