புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (12:09 IST)

இனிமேலும் பொறுமையாக இருக்க மாட்டேன்: சசிகலாவுக்கு ஜெ.தீபா எச்சரிக்கை

J Deepa
இனிமேலும் பொறுமையாக இருக்க மாட்டேன் என சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு சசிகலாவும் அவருடைய உறவினர்களும் தான் காரணம் என்றும் தன்னுடைய ஆதாயத்திற்காக என்னுடைய அத்தையை சசிகலா பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஜெ தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
மேலும் என் குடும்பத்தைப் பற்றியும் என் அம்மாவைப் பற்றியும் சசிகலா பேசிக்கொண்டிருந்தால் இனியும் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
என் அம்மாவின் சாவுக்கு கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர் தான் சசிகலா என்றும் தன் மீது எந்த தவறும் இல்லை என சசிகலா நீதிமன்றத்தில் மக்களிடத்திலும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார். தீபாவின் இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Siva