1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. It may rain heavily in chennai and pondy

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Rain
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வெயிலின் புழக்கம் அதிகமாகவே இருக்கிறது. 
 
இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் இன்று காலை அறிவித்துள்ளது.

அதேபோல், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இருந்து வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
–– ADVERTISEMENT ––
 
 
 
அடுத்த கட்டுரையில்
வினோத திருவிழா: எரிமலை மீது ஏறி வழிபடும் மக்கள்