1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (15:55 IST)

பச்சிளம் குழந்தை நரபலியா ?

மதுரை மாவட்டத்தில் பச்சிளம் குழந்தையின் தலையைத் தூக்கி வந்த நாயிடம் இருந்து தலையை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பீபிகுளம் அருகே நேற்று நாய் ஒரு பச்சிளம் குழந்தையின் தலையைக் கவ்வியபடி சென்றது. இதைப் பார்த்த ஒருவர் உடனடியாகப் போலீஸிற்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீஸார் சாக்கடையில் இருந்த குழந்தையின் தலையை மீட்டனர்.

இந்தக் குழந்தையை யாராவது மூடநம்பிக்கையால் நரபலி கொடுப்பதற்காக தலை துண்டிக்கப்பட்டாதா? தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தையை தெருவில் வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.