வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:10 IST)

போயஸ் தோட்டத்திலிருந்து 3 முறை வெளியேற்றப்பட்டவர் முதலமைச்சரா? - என்.ஆர்.தனபாலன் கேள்வி

சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் போயஸ் தோட்டத்திலிருந்து 3 முறை வெளியேற்றியுள்ளார் என்பதை நாடறியும். இன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக மக்கள் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் இன்றோ தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மாறாகவும் நடந்துள்ளது.
 
அதிமுகவிலும், அதிமுக நடத்திய ஆட்சியிலும் கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவிற்கு துணையாய் இருந்தேன் என்று சொல்லுகிற சசிகலாவிற்கு எந்த ஒரு பதவியோ, பொறுப்போ, முக்கியத்துவமோ கொடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் போயஸ் தோட்டத்திலிருந்து 3 முறை வெளியேற்றியுள்ளார் என்பதை நாடறியும்.
 
உண்மை நிலை இவ்வாறிருக்க தமிழக மக்களை திசை திருப்பும் விதமாக நாடகமாடி ஜெயலலிதாவிற்கு உண்மையான விசுவாசி போன்ற தோற்றத்தை உருவாக்கி அதிமுக கட்சியையும், இன்று ஆட்சியையும் கைப்பற்றியுள்ளார். இது தமிழக மக்கள் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கை முடிவுக்கு எதிரான செயல்” என்று கூறியுள்ளார்.