ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போராடுவது சரியா?
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடந்த1996ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தது. ஆலங்குடி தொகுதியில் உள்ள நெடுவாசலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது அந்த தொகுதியின் எம்.எல்.ஏஆக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜசேகர்.
ஆலங்குடி தொகுதி சிவகெங்கை பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. அந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம்.
இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் திமுகவை சேர்ந்த ஆ.ராசா.
1996ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சி மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி கருணாநிதியின் திமுக ஆட்சி.
ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு காரணமான அனைத்து கட்சிகளும் இன்று அந்த திட்டத்திற்கு எதிராக போராடுகின்றன
மேலே சொன்ன தகவல்கள் இணையதளங்களிலும் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை மக்கள் கூகுளில் தேடி தெரிந்து கொள்ளுங்கள்