வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (16:18 IST)

இப்டியே ஐபிஎஸ்ஸாவே இருந்துடுவியா.. எறங்கி வந்துதானே ஆகணும்..! மோதுவோம் வா! - வருண்குமார் ஐபிஎஸ்க்கு சீமான் சவால்!

Seeman vs Varun Kumar IPS

ஐபிஎஸ் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வருண்குமார் ஐபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

 

Seeman vs Varun Kumar IPS
 

திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் கடந்த சில காலமாகவே உரசல்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஐபிஎஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வருண்குமார், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அருண்குமாருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அருண்குமாரின் இந்த பேச்சு குறித்து கண்டித்து பேசிய சீமான் “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, சின்னம் கிடைக்க பெற்று தனியாக நின்று மாநில அளவில் மூன்றாவது இடத்தில் வாக்குகளை வாங்கியுள்ள கட்சி நாம் தமிழர் கட்சி.

 

அப்படிப்பட்ட கட்சியை பிரிவினைவாத கட்சி என்று பேசுவதா? தம்ழி, தமிழன் நலன் பேசினால் பேரினவாதியா? பிரதமர் மோடி கூட பல இடங்களில் தமிழையும், அதன் பெருமைகளையும் சுட்டிக்காட்டி பேசுகிறார். அவர் பேரினவாதியா? இதற்குதான் ஐபிஎஸ் படித்து பணிக்கு வந்திருக்கிறீர்களா?

 

இப்படியே ஐபிஎஸ் பதவியிலேயே வாழ்நாள் முழுவதும் இருந்து விட முடியுமா? ஒருநாள் கீழே இறங்கிதான் ஆக வேண்டும். ஆனால் நாங்கள் இங்குதான் இருப்போம் என்பது நியாபகத்தில் இருக்கட்டும். அப்படி மோதிதான் பார்க்க வேண்டுமென்றால் இறங்கி வாருங்கள் மோதுவோம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K