திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (15:04 IST)

எளிமையான உணவு போதும்… மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

தலைமைச் செயலாளர் இறையன்பு தான் ஆயுவுகளுக்காக வரும்போது எளிய சைவ உணவு தயார் செய்தால் போதுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ‘ஆய்விற்காக மாவட்டங்களுக்கு செல்லும்போது காலை மற்றும் இரவு வேளையில் எளிமையான உணவும், மதியம் சைவ உணவு மட்டுமே ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் அதிகபட்சமாக இரண்டு காய்கறி கூட்டு, பொறியல்கள் இருந்தாலே போதுமானது. ஆடம்பரமான உணவு ஏற்பாடுகளை தவிர்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.