1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (12:36 IST)

சாத்தூர் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் பரவிய விவகாரம் – விசாரணைத் தொடக்கம்

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக ரத்தம் மூலம் எய்ட்ஸ் பரவிய விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று விசாரணையைத் தொடங்கியது.
 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றியதால்  9 மாத கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றில் உள்ள சிசுவிற்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க நிறைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த விஷயம் ஊடகங்களில் பரவி பல விவாதங்களை நம் சமூகத்தில் எழுப்பியுள்ளது.

இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்றும் அவர்களின் அலட்சியத்தால் இரண்டு உயிர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்மந்தமாக 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அரசு வேலை கொடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையைத் தானாக முன்வந்து விசாரித்தது மனித உரிமைகள் ஆணையம்.

இந்த பிரச்சனையில் தொழில்நுட்பரீதியாக வும், நிர்வாகரீதியாகவும் ஏற்பட்டுள்ள தவறுகளைக் கண்டறியும் வகையில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளார்.

இந்தக் குழுவில், மருத்துவப் பணி கள் கூடுதல் இயக்குநர் டாக்டர் மாதவி சென்னை மருத்துவக் கல்லூரி மருந்துத் துறை பேராசிரியர் டாக்டர் ரகு நந்தனன், நுண் உயிரியல் துறை பேராசிரியை யுப்ரேசியா லதா, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியை மணிமாலா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக பேராசிரியர் ஹம்ச வர்த்தினி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவக்குழ்வினர் இன்று சிவகாசியில் உள்ள ரத்த வங்கியில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.